ஜெகன்மோகன் ரெட்டியை, சந்தித்த முதலமைச்சரின் மகன்.!

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியே அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சி அமைத்தது.

அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு மாநிலத்தின் முக்கிய பிரமுகர்களும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவில் முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டியை, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சரின் மகன் நிகில் குமாரசாமி அமராவதியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.

ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த நிகில் குமாரசாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.