கடுமையாக வடிவேலுவை எச்சரிக்கும் சமுத்திரக்கனி.!

சமீபத்தில் நடிகர் வடிவேலு, இயக்குனர் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் ஆகியோர் குறித்து ஒருமையில் விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில், நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி வடிவேலுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் “அண்ணன் வடிவேலு அவர்களின் பேட்டி பார்த்தேன். இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவன் இருவரையும் நாகரீகமற்ற வார்த்தையால் பேசியிருப்பது பெரும் வருத்தத்திற்கும் கண்டணத்திற்கும் உரியது.

சிம்புவின் கிரியேட்டிவ் புலிகேசி தவிர்த்து மற்ற படைப்புகளிலும் தெரியும். இயக்குநர்களை அவமதிக்காதீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்ட ட்வீட்டர் பதிவு: