ஆண்களே உஷார்.! இந்த மீனை தொட்டுக்கூட பார்க்கவேண்டாம்.!

மொய் மீன், பூ விரால், தேளி விரால் என பல பெயர்களில் பல ஊர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது இந்த தேளி மீன். பல நாடுகளில் அரசாங்கத்தால தடை செய்யப்பட்ட தேளி மீன் இனம் அயல் நாட்டில் இருந்து நம் நாட்டிற்கு வந்த மீன் ஆகும்.

இந்த மீன் அசைவம் மட்டுமே உண்டு வாழக் கூடிய அசுர வகையை சேர்ந்தது. சிலர் பணத்திற்காக இந்த மீன்களுக்கு கோழியின் கழிவுகளை போட்டு வளர்க்கின்றனர். மேலும் எந்த உயிரினம் இறந்தாலும் அவற்றை வீசினால் அந்த மீன்கள் தின்று வளர்கின்றன.

செயற்கையாக வளர்க்கப்படும் இந்த மீனுக்கு நல்ல வளர்ச்சியை குறுகிய காலத்தில் கொடுக்கும் வகையில் இறந்துபோன கோழிக்கறி, இறந்துபோன நாய்களை கூட கொன்று இதற்கு உணவாக போடுவதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த மீன்கள் பல இடங்களில் வளர்க்கப்படுகிறது. ஆனால் இந்த மீனை கடல் கெளுத்தி என்று கூறி விற்பனை செய்கின்றனர். இந்த மீனை பற்றி தெரியாதவர்கள் அதனை வாங்கி சென்று சாப்பிடுகின்றனர்.

இந்த மீனை உண்பவருக்கு, இதய நோய், தோல் நோய்கள், புற்று நோய் , ஆண்மை குறைவு, போன்ற நோய்கள் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட மீன் என்பதால் மக்கள் உஷாராக இருங்கள்.