மாமியாரை தறுமாறாக தாக்கிய மருமகள்.. வீடியோ..!

81 வயதுடைய மாமியாரை மருமகள் சரமாறியாக தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தின் மஹெந்திரகார் மாவட்டம் நார்னெல் அருகில் உள்ளது நிவாஸ்நகர் கிராமம்.அந்த கிராமத்தை சேர்ந்த காந்தா தேவி என்கிற பெண் , சாந்த பாய் என்கிற தனது 81 வயது மாமியாரை முடியை பிடித்து இழுத்து கடுமையாகத் தாக்குவதைப் பார்த்த ஒரு பள்ளி மாணவி அந்தக் காட்சிகளைத் தன் செல்போனில் படமெடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்நிலையில், குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து நார்னெல் துணை கண்காணிப்பாளர் வினோத் குமார், சில பெண் அதிகாரிகளை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

விசாரணை முடிந்த நிலையில் நார்னெல் துணை கண்காணிப்பாளர் வினோத் குமார் கூறியதாவது, சாந்தாபாய் தன்னை, தன் மருமகள் காந்தா தேவி பலமுறை கொடூரமான முறையில் தாக்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார். அது தவிர அந்த பள்ளி மாணவி எடுத்த வீடியோ ஆதாரமும் இருக்கிறது.

தாக்குதலுக்கு உள்ளான சாந்த பாய்க்கு மருத்துவ பரிசோதனை நடக்கிறது. அந்த அறிக்கைக்காகத்தான் காத்திருக்கிறோம்.அது வந்த உடன் காந்தா தேவிமீது நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்துள்ளார்.

அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள்,காந்தா தேவியின் கணவரும் பிள்ளைகளும் வெளியே போன உடன் காந்தா தேவி தனது மாமியாரை மிகவும் மோசமான முறையில் நடத்துவார், சில நேரங்களில் மாமியாரை அடிக்கவும் செய்வார் என்று கூறியுள்ளனர்.