12-வதுமாடியில் இருந்து குதித்த முதியவர்…. பரபரப்பு தகவல்..!

கொரியாவை சேர்ந்த 51-வயது முதியவர் ஒருவர் ஆடைகள் இன்றி நிர்வாணமாக, அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 12-வது மாடியில் இருந்து குதித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

கொரியாவின் ஜியான்ஜி மாகாணத்திற்கு உட்பட்ட உயியாங்பூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிறுப்பின் 12-வது மாடியில் வசித்து வருபவர் ஜங். இவர் கடந்த வியாழன் அன்று காலை சுமார் 9.45 மணியளவில் தனது வீட்டின் ஜன்னல் கதவை திறந்து, ஜன்னல் வழியாக வீட்டியில் இருந்த பொருட்களை வெளியே தூக்கி எறிந்துள்ளார்.

தூக்கி எறியும் போது ஜங் ஆடைகள் ஏதும் அணியாமல் நிர்வாணமாக இருந்ததாகவும், பெரும் கூச்சலிட்டதாகவும் அருகாமை வீட்டார் தெரிவித்துள்ளனர்.

மனநலம் பாதிக்கப்பட்டவரா?

சுமார் இரண்டு மணி நேரங்களாக ஜங் இவ்வாறு கூச்சலிட்டு பிரச்சனை செய்ய அப்பகுதி மக்கள் உயியாங்பூ காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ஜங் இருந்த அறையினுள் நுழைய முற்பட்டனர். ஆனால் தனது வீட்டில் இரண்டு சடலங்கள் இருப்பதாகவும், வீட்டில் உள்ள பொருட்களுடன் இரண்டு உடல்களையும் எரித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

பின்னர் ஜங் கூறியது பொய் என உறுதிப்படுத்திக்கொண்ட காவல்துறையினர் ஜங்-கின் அறையினுள் மீண்டும் நுழைய முற்பட்டனர். அப்போது தன்னை காப்பாற்றிக்கொள்ள ஜங் ஆடைகள் ஏதும் இன்றி நிர்வாணமாக தனது 12-வது மாடி அறையில் இருந்து குதித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் ஜங்-ன் இருகால் எலும்புகளும் முறிந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் ஜங் போதை பொருள் ஏதும் உட்கொண்டு இருந்தாரா அல்லது மன நலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.