தோனிக்கு அனுமதி மறுத்த ஐசிசி! ரசிகர்கள் கவலை!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி தன்னுடைய முதல் லீக்
ஆட்டத்தில் நேற்று தென் ஆப்பிரிக்கா அணியை சந்தித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 228 ரன்கள் என்ற இலக்கை 47.3 ஓவர்களில் 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 122 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற்றதோடு, ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

இப்போட்டியில் இத்தனை விஷயங்களை தாண்டி வேறு ஒரு விஷயம் தற்போது அனைவராலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனியின் கிளவ்ஸில் இருக்கும் குறியீடு தான் என்று தெரிய வந்துள்ளது.

நேற்றைய போட்டியின் டோனி கீப்பிங் செய்த போது அணிந்திருந்த கிளவ்ஸில் இந்தியாவின் துணை ராணுவ சிறப்பு படையின் முத்திரை பதிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த முத்திரை தியாகம் என்ற அர்த்தம் கொண்டதாகும்.

இதை டோனியின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது எந்த அளவிற்கு பாராட்டை பெற்றுள்ளதோ, அதே அளவிற்கு சர்ச்சையை பெற்றுள்ளது.

இது தேவையற்ற சர்ச்சையை உண்டாக்கும் என்பதால், அந்த குறியீட்டை உடனடியாக நீக்க, ஐசிசி இந்திய கிரிக்கெட் வாரியத்தை கேட்டுக்கொண்டுள்ளது.