ஜனாதிபதி இந்தியாவுக்கு பயணம்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (30ஆம் திகதி) இந்தியாவிற்குப் பயணமாகியுள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடி மீண்டும் இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்குப் பயணமாகிறார்.

நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.