உடலுக்கு சத்தான காராமணி சாதம்???

தினமும் நமது குழந்தைகளுக்கு ஒரே விதமான உணவு சாதங்களை செய்து வழங்கினால்., அவர்களுக்கு உணவின் மீது புரியாத வெறுப்பானது ஏற்படும். அவர்களுக்கு வீட்டில் உள்ள சிறு சிறு பொருட்களை வைத்தே சத்தான மற்றும் சுவையான சாதங்களை செய்து வழங்கினால்., உணவின் மீது அலாதி பிரியம் ஏற்பட்டு அதிகளவு சாதங்களை உண்ணுவார்கள்.

தேவையான பொருட்கள்:

அரிசி – ஒன்றரை கிண்ணம்.,
காராமணி – அரை கிண்ணம்.,
வெங்காயம் – 1 எண்ணம் (Nos).,
தக்காளி – 1 எண்ணம் (Nos).,
சாம்பார் பொடி – அரை தே.கரண்டி.,
மிளகாய்த்தூள் – ஒரு தே.கரண்டி.,மஞ்சள்தூள் – கால் தே.கரண்டி.,
காய்ந்த மிளகாய் – 2 எண்ணம் (Nos).,
கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை – சிறிதளவு.,
கடுகு., உளுத்தம்பருப்பு., சீரகம் – தலா அரை தே.கரண்டி.,
எலுமிச்சை சாறு – ஒரு தே.கரண்டி.,
எண்ணெய் – 3 தே,கரண்டி.,
உப்பு – தேவையான அளவு…

செய்முறை:

முதலில் எடுத்துக்கொண்ட தக்காளி., வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை நன்றாக சிறிது சிறிதாக நடுங்கி கொள்ளவும். இதற்கு முன்னதாக காராமணியை ஊறவைத்து குக்கரில் நன்றாக வேகவைத்து வடிகட்டி இறக்கி கொள்ளவும்.

தேவையான அளவு சாதத்தை எடுத்து நன்றாக உதிரியாக இருக்கும் படி வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் வானெலியில் எண்ணெய்யை ஊற்றி., எண்ணெய் நன்றாக காய்ந்ததும்., கடுகு., சீரகம் மற்றும் உளுந்தம்பருப்பு போட்டு நன்றாக தாளித்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் அதில் காய்ந்த மிளகாய்., கறிவேப்பில்லை மற்றும் வெங்காயத்தை சேர்ந்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். நன்றாக வதங்கியவுடன் தக்காளியை சேர்ந்து வதக்கிய பின்னர் சாம்பார் பொடி., மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள்., காராமணி., உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றை சேர்ந்து நன்றாக இரண்டு நிமிடம் வேகவைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

பின்னர் இந்த கலவையுடன் சாதத்தை சேர்த்து நன்றாக கிளறினால் சுவையான காராமணி சாதம் தயார்.. இதன் மேல் கொத்தமல்லி தழைகளை சிறிதளவு சேர்த்து பின்னர் சாப்பிடவும்…