உடலில் தீயுடன் பொது இடத்தில் ஓடிய மர்ம நபர்!

அமெரிக்காவின் வெள்ளைமாளிகை அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென உடலில் தீவைத்துக்கொண்டு நிற்பதை பார்த்து சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே மதியம் 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் திடீரென உடலில் தீ வைத்துக்கொண்டு ஓடியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலாப்பயணிகள் துணிகளை கொண்டு அணைக்க முயன்றுள்ளனர். அதற்குள் அங்கிருந்த அதிகாரிகள் வேகமாக ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

மேலும் பொலிஸார் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் அந்த நபரை மீட்டு வேகமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த நபர் பெரிய தீக்காயங்கள் ஏற்படாத அளவிற்கு பாதுகாப்பு கவசம் ஒன்றினை அணிந்திருந்தார்.

ஆனால் அதனையும் மீறி அவரது உடலில் 85 சதவிகித தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.