ஈச்சம் பழம் சாப்பிடுவதனால் உடலில் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

ஈச்சம் பழத்தில் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற மூல பொருட்கள் அதிகம் இருக்கின்றன.

அதுமட்டுமின்றி பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் இது பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது.

அந்தவகையில் ஈச்சம் பழம் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மை என்ன என்பதை பார்ப்போம்.

 • மலச்சிக்கலால் அவதிபடுபவர்கள் தினமும் மூன்று வேளை உணவை சாப்பிடுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
 • தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு எலும்புகள் வலுவிழப்பது, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
 • தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஈச்சம் பழங்களை சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வை திறன் மேம்படும். கண்புரை போன்ற பிரச்சனை ஏற்படுவதையும் தடுக்கும்.
 • நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் என தினந்தோறும் சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவதால் அவர்களின் உடல் பலம் பெறும்.
 • கருவுற்றிருக்கும் பெண்களும் ஈச்சம் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது, அப்பெண்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது.
 • தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில ஈச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு, சூடான பசும்பால் அருந்தினால் நரம்புகள் வலுப்பெற்று , ஆண்மை குறைபாடுகள் நீங்கும்.
 • தினந்தோறும் பேரிச்சம் பழங்களை நன்கு அரைத்து, அதை சூடான பாலில் தினமும் மூன்று வேளை அருந்தி வந்தால் உடல் எடை பெருகும். நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் உடலுக்கு கொடுக்கும்.
 • போதை பழக்கத்தில் விடுபட நினைப்பவர்கள், போதை பொருள் பயன்படுத்துவதற்கு பதிலாக சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வருவது கொஞ்சம், கொஞ்சமாக போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கும். உடல் நலத்தையும் மேம்படுத்தும்.
 • வயிற்று போக்கால் அவதியுறுபவர்கள் தினமும் மூன்று வேளை சில ஈச்சம் பழங்களை சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு நிற்கும். உடலுக்கும் பலத்தை கொடுக்கும்.
 • ஈச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு சிறுநீரக புற்று, குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து குறைகின்றது.
 • ஈச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் இதை சாப்பிடும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தை தருகிறது.