இன்றுள்ள காலத்தில் மோகக்காதல் அதிகரிக்க காரணங்கள் என்ன?

இன்றுள்ள காலகாட்டத்தின் வளர்ச்சியால் நாம் பல்வேறு விதமான அறிதலையும்., புரிதலையும் தெரிந்து கொண்டு வருகிறோம். இன்றுள்ள காலகட்டத்தில் பல்வேறு விதமான வளர்ச்சியை நாம் கண்டு வந்த நிலையில்., சில செயல்கள் ஏனோ நம்மை அதிகளவு பாதிக்கிறது. அந்த வகையில் நம்மை பாதித்தது கள்ளக்காதல் எனும் பிரச்சனை….

இன்றுள்ள காலகட்டத்தில் கள்ளக்காதல் பிரச்சனைகளால் அரங்கேறிய கொலைகளின் துயரங்களையும்., அவர்களின் குடும்பத்தின் பரிதாபத்தையும் நாம் அறிவோம். அதனைப்போன்று திருமணம் முடிந்த சில நாட்களில் அல்லது வருடங்களில் தனது கணவனை பிரிந்து மற்றொரு நபரோடு தாம்பத்தியம் மேற்கொள்வது போன்ற செயல்கள் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருகிறது.

இந்த முறையற்ற உறவுகளுக்கு பல விதமான காரணங்கள் உள்ளது. இந்த உலகத்தில் நாம் பிறந்தது நல்ல நிலையில் நமது வாழ்க்கையை மேற்கொள்வதற்கும்., மூன்று வேலை பசியின்றி வயிறார சாப்பிட்டு பணிகளை கவனிக்கவும்., நமது எதிர்கால சந்ததியை உருவாக்குவதற்கும்., இந்த உலகின் அற்புதங்களை ரசிக்கவே மனிதன் என்ற உடலை நாம் பெற்றோம்.

இளவயது திருமணம்:

இந்தியா மட்டுமல்லாது பெரும்பாலான நாடுகளில் சிறுவயது மற்றும் குழந்தை திருமணங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் பெண்கள் தங்களின் பருவ வயது அல்லது 13 முதல் 18 வயதை எட்டியவுடன்., சுமார் 30 வயது நபர்களுக்கு திருமணம் முடித்து வைக்கப்படுகின்றனர்.

இந்த காரணத்தால் பெண்கள் தங்களின் இளவயது வாழ்க்கையை இழந்து., குடும்பம் என்ற அறைக்குள் அடைபடுகின்றனர். ஏதும் அறியாத வயதில் தனது வயிற்றல் குழந்தையை சுமக்கும் பெண்., தாம்பத்தியம் என்ற உறவின் முழு அர்த்தத்தை புரியும் காலத்தில்., இளவயதில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் தனது முதுமையை எட்டுவதால்., தாம்பத்தியத்தில் அவரால் ஈடுபட முடிவதில்லை. இது அவர்களுக்கான நபரை தேட வழிவகை செய்கிறது.

கணவன் – மனைவி புறக்கணிப்பு:

இன்றுள்ள காலத்தில் பெரும்பாலானோர் தங்களின் மனைவியை பிரிந்தும்., உள்ளூர்களில் வேலை பார்த்தாலும் இரண்டு பணி நேரங்களிலும் பணியாற்றி வருகின்றனர். சிலர் வாகனங்களில் தொடர்ந்து பயணித்து பணியாற்றி வருகின்றனர். இந்த சூழ்நிலையின் காரணமாக இருவருக்கும் இடையேயான தாம்பத்தியம் நடைபெறாமல் போகிறது.

இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே சில நெருக்கமான நேரத்தை எதிர்பார்க்காமல் கிடைக்கும் நேரத்தில்., சில சிறுசிறு விளையாட்டுகளை கூட செய்வதில்லை. இதனால் இருவருக்கும் இடையே தாம்பத்திய விரிசல் ஏற்பட்டு தனக்கு ஏற்ற ஒரு துணையை தேடி செல்கிறாள்.

சந்தேகம்:

இன்றுள்ள பல குடும்பத்தில் நடக்கும் சச்சரவுகளில் பெரும்பாலும் வெளிவராத பிரச்சனையாக இருந்து வருவது சந்தேகம். இந்த சந்தேகம் மனைவியின் மீது அடிக்கடி அல்லது ஏதேனும் ஒரு நபருடன் சகோதரத்துவத்துடன் பேசும் சமயத்தில் பல விதமான எண்ணத்தை மனதில் வளர்த்து சந்தேகமாக எழுப்பப்பட்டு., கணவராலேயே திரைக்கதை காவியங்கள் இயற்றப்படுகிறது.

சில சமயத்தில்., இந்த சந்தேகமானது கணவனின் வக்கிர புத்தியினால் மனைவியை தொடர் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குதலும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு அமைதியாக இருக்கும் பெண்ணிடம் கணவர் பேசும் அவதூறான பேச்சுக்களால்., இவனிடம் இருப்பதற்கு வேறு யாரிடமாவது இருந்து விடலாம் என்ற எண்ணமானது வந்துவிடும்.

பொதுநலன் கருதி: கணவன் – மனைவியை பொறுத்த வரையில் ஒளிவு மறைவில்லாத வாழ்க்கையின் மூலமாகவும்., தாம்பத்தியம் என்பது உங்களுக்கான துணையுடன் மட்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமானது இருவரிடமும் இருக்க வேண்டும். மோகம் என்பது குறிப்பிட்ட வயது வரைதான்., மோகத்திற்கு மேலான வாழ்க்கையானது நமக்கு உள்ளது என்ற எண்ணம் இருவரிடமும் இருத்தல் நல்லது.