கால்பந்தாட்ட பயிற்சியாளர் கொலை! காரணம்?

பிரான்சின் Vauvert நகரில் தன்னார்வ கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Vauvert நகரில் கடந்த வெள்ளிக்கிழமை, கால்பந்து விளையாட்டுக்குழு ஒன்றில் பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு இடையே கருத்துமோதல் ஏற்பட்டுள்ளது.

அப்போது வீரர்களில் ஒருவர் பயிற்சியாளரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து தகவல் அறிந்து உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், குறித்த பயிற்சியாளரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், பாதி வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து, கத்தியால் குத்திய குறித்த வீரர் உடனடியாக பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

இருவருக்கும் இடையில் சில நாட்களாக கருத்து வேறுபாடு இருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய குறித்த வீரர் விளையாட்டுக் குழு ஒன்றின் தலைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.