முஸ்­லிம்களினால் எதிர்­கா­லத்தில் பாரிய ஆபத்து- சம்­பிக்க

தமது மதம் சாராத  ஏனை­ய­வர்­களை அழிக்­க­  வேண்டும் என்ற அடிப்­படை கொள்­கையில் செயற்­படும் 30 முதல் 40 ஆயிரம் முஸ்லிம்கள் இந்த நாட்­டுக்குள் உள்­ளனர். இன்று இவர்­களின் மூல­மாக அச்­சு­றுத்தல் இல்­லா­து­  போ­னாலும் எதிர்­கா­லத்தில் அச்­சு­றுத்தல் உள்­ளது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க சபையில் தெரி­வித்தார்.

மக்கள் விரும்­பா­விட்­டாலும் கூட தேசிய பாது­காப்பை கருத்தில் கொண்டு அவ­ச­ர­கால சட்­டத்தை ஏற்­றுத்தான் ஆக­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அவ­ச­ர­கால சட்­டத்தை நீட்­டிக்கும் விவா­தத்தில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும்  குறிப்­பி­டு­கையில்,

இன்று நாட்டின் நெருக்­க­டியை அடுத்து அவ­ச­ர­கால சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. இதனால் மக்­களின் ஜன­நா­யக செயற்­பா­டு­க­ளுக்கும் பாது­காப்­பு­த­ரப்பின் செயற்­பா­டு­க­ளுக்கும் இடை­யி­லான சம­னிலை தன்­மையை உரு­வாக்க முடியாது என்ற கேள்வி உள்­ளது.

ஆனால் நாட்டின் தேசிய பாது­காப்பு என்ற விட­யத்தில் மக்கள் தியா­கங்­களை செய்­துதான் ஆக­வேண்டும். தேடுதல், விசா­ர­ணை­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யாக வேண்டும். சிரி­யா­விற்கும்  ஈராக்­கிற்கும்  சம்­பந்­தமே இல்­லாத எமது கிறிஸ்­தவ மக்­களை கொலை­செய்ய எடுத்த முயற்­சி­களும் இதற்கு பின்­னரும் நடக்­குமா என்ற சந்­தேகும் ஏன் எடுக்­கப்­பட்­டது.

இந்த இஸ்­லா­மிய அமைப்பு தாம் ஒரு இனம்  தான் இந்த உலகின் மக்கள் என்ற கொள்­கையில் நாட­ளா­விய ரீதியில் இவர்கள் பரவி வரு­கின்­றனர்.  இதனை கட்­டுப்­ப­டுத்த வேண்டும். பல­வீ­ன­மான  நாடு­களில் உள்­நு­ழைந்து தமது பிராந்­தி­யங்­களை உரு­வாக்க முடியும் என்ற நோக்கம் அவர்­க­ளுக்கு உள்­ளது.

இந்த நோக்­கத்தில் தான் உலக நாடு­க­ளுக்கு பயணம் செய்து எல்லா நாடு­க­ளிலும் பயங்­க­ர­வாத தாக்­கு­த­லை­களை நடத்­து­கின்­றனர். குழு­வாக அல்­லாது தனி நப­ராக தன்னை தற்­கொலை தாரி­யாக மாற்­றிக்­கொள்­கி­றனர். எந்த வகை­யி­லேனும் கொலை செய்­ய­வேண்டும் அதன் மூலம் இஸ்­லா­மிய தேசம் ஒன்­றினை உரு­வாக்க வேண்டும் என்­பதே இவர்­களின் நோக்­க­மாகும்.

இந்த பயங்­க­ர­வா­தத்தை அழிப்­பதில் பாது­காப்பு தரப்பின் செயற்­பா­டுகள் மூல­மாக மட்­டுமே நிறுத்த முடி­யாது. இந்த நாட்டில் தவ்ஹித் சிந்­த­னையில் இருந்து இந்த நாட்டில் கொலை­களை செய்யும் ஒரு தரப்பு உள்­ளது. அதேபோல் ஆயிரம் இரண்­டா­யிரம் பேர் கல்­வியை பெற்று பின்­ன­ணியில் இருந்து பயங்­க­ர­வா­தத்தை பலப்­ப­டுத்தும் தரப்பும் இலங்­கையில் உள்­ளது.

இவர்கள் இந்த பாரா­ளு­மன்­றத்­திலும் இருந்­துள்­ளனர். அதேபோல் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடுபடாதபோதிலும் கூட தமது மதம் சார்ந்தவர்கள் தவிர்ந்த ஏனைய  அனை­வரும் மத சார்­பில்­லா­தவர் என்ற கருத்தையும் இதனால் அவர்­களை அழிக்கும் கொள்­கையில் உள்ள 30, -40 ஆயிரம் பேர் உள்­ளனர்.

அதேபோல் இலங்­கையர் என்ற உணர்வு இல்­லாத அரா­பிய கொள்­கையில் உள்­ள­வர்கள் உள்­ளனர். இவர்கள் அனை­வரும் தவி­ர்த்து இலங்­கையில் முஸ்­லிம்­க­ளாக அதேபோல் ஏனைய மத இனத்­த­வரை அங்­கீ­க­ரித்து அவர்­க­ளுடன் அமை­தியா வாழும் முஸ்­லிம்­களும் உள்­ளனர்.

இவ்­வாறு ஐந்து பிர­தான பிரி­வாக உள்­ளனர். இவர்களை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். இதில் அச்சுறுத்தலான பிரிவுகளை இல்லாதொழிக்க வேண்டும்.  இன்று அச்சுறுத்தல் இல்லாதுபோனாலும் கூட எதிர்காலத்தில்  அச்சுறுத்தல் ஏற்படலாம். இந்த நாட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும். இதில் சகல தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.-