தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு!

17 ஆவது இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணி நேற்று இடம்பெற்றது.

இதில் பாரதிய ஜனதாக் கூட்டணி 350 இடங்களில் வெற்றிபெற்றது. அத்துடன் வட இந்தியப் பகுதிகளில் அதிக இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. அதேபோன்று மத்திய பிரதேசத்திலும், காங்கிரஸை விட பாரதிய ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றது.

இந் நிலையில் மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் சேகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரதன் சிங் கள நிலவரத்தை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தார். இச் சமயத்தில் காங்கிரஸ் கட்சி பின்னிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.