தினமும் ராகியை சாப்பிடலாமா?

கேழ்வரகு, ராகி, கேப்பை என பல்வேறு பெயர்களால் அறியப்படும் நம் பாரம்பரிய சிறுதானிங்களில் முதன்மையானவையாகும்.

ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லதாக கருதப்படுகின்றது.

மேலும், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன.

அந்தவகையில் ராகியினை தினமும் சாப்பிடுவதனால் உடலில் என்ன என்ன நன்மைகள் வரும் என்று பார்ப்போம்.

  • கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.
  • தினமும் ஒருவேளையாவது ராகியை உணவில் எடுத்துக் கொண்டு வந்தார்கள் என்றால், எலும்புகள் வலிமை பெறும். உடல் ஆற்றல் அதிகரிக்கும்.
  • தொப்பை முழுக்க கரைந்து, தட்டையான வயிறைப் பெற வேண்டுமென்றால், தினமும் காலையில் ராகி உருண்டையைச் சாப்பிட வேண்டும்.
  • ராகியை களியாக்கி மூட்டுவலி உள்ள இடங்களில் பற்று போட்டு வந்தால் வலி குறையும்.
  • சர்க்கரை நோய் இருக்கின்றவர்களுக்கு ராகி மிகவும் நல்லது. இது ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
  • ராகியில் அதிக அளவில் லெசிதின் மற்றும் மெத்தியோனைன் என்னும் தீமையை உண்டாக்கும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.
  • ராகியில் அதிக அளவிலான இரும்புச்சத்துக்கள் இருப்பதால் இது ரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை ஏற்படுத்துவதைத் தடுக்கிறது.
  • ஹைப்போ தைராய்டு இருக்கின்றவர்கள் இந்த ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டை சரிசெய்யும்.