2 மனைவிகளையும் கொன்று தூக்கில் தொங்கிய கணவன்!

ஒடிசா மாநிலத்தில் தன்னுடைய இரண்டு மனைவிகளையும் சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் மயுர்பஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஷியாமா மராண்டி (60). மாற்றுத்திறனாளியான இவருக்கு புலாணாணி (47), சல்கோ (41) என்கிற இரண்டு மனைவிகள் இருந்தனர்.

மூன்று பேருக்கும் இடையில் நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஷியாமா மராண்டி, சுத்தியலால் இரண்டு மனைவிகளையும் அடித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அறிந்த வந்த பொலிஸார், மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவத்திற்கான காரணம் குறித்தும் விசாரணை மேற்கொன்டு வருகின்றனர்.