விகாரையின் உடைமைகளை உடைத்து தீ வைத்த மூவர் கைது!

பதுள்ளை சொரனாதோட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட துங்கிந்த திம்பிரிகஸ்பிடிய பகுதியிலுள்ள ஸ்ரீ சைதலாராம விகாரையில் கடந்த வருடம் 2018.03.25 ஆம் திகதி இனந்தெரியாத மர்ம நபர்களால் விகாரையின் உடைமைகளை உடைத்து தீ வைத்துச் சென்றிருந்தமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விகாரைக்கு பொறுப்பான சேனா முனிந்த தேரரினால் பதுளை குற்றத்தடுப்பு பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பதுளை குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எடிக் ரோகித மற்றும் குற்றத்தடுப்பு பிரிவின் உதவி பொறுப்பதிகாரி மங்கல ஜயதிலக தலைமையிலான குழுவினரின் விசாரணைகளை  மேற்கொண்டு வந்த ஒருவருடத்துக்குப் பின் தற்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் குறித்த பிரிவுக்குப் பொறுப்பான கிராம சேவகர் அதிகாரியும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவரும், பிரதேச வாசி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு பதுளை குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைகளையடுத்து பதுளை நீதிமன்ற நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.