கலக்கத்தில் தி.மு.க தொண்டர்கள் – அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூத்த அரசியல் பிரபலம்..!

திமுக மூத்த அரசியல் பிரபலம், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வகையில் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளதால், நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பு நிலவி வருகிறது.

இந்தநிலையில், தி.மு.கவின் பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகன் உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.