அரபு மொழிக்கு ஆப்பு வைத்தார் சிறிலங்கா பிரதமர்!

வீதிகளின் பெயர்ப்பலகைகள் தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகள் தவிர்ந்த வேறெந்த மொழிகளும் இடம்பெறக் கூடாது என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்காவில் உள்ள எல்லா வீதி பெயர்ப் பலகைகளும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மாத்திரம் இருப்பைதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, உள்நாட்டு விவகார, உள்ளூராட்சி, மாகாண சபைகள்  அமைச்சர் வஜித அபேவர்த்தனவுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த மூன்று மொழிகள் தவிர்ந்த ஏனைய மொழிகள் பெயர்ப்பலகைகளில் இடம்பெறக் கூடாது என்றும் சிறிலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.

கிழக்கிலும், வவுனியாவிலும் சில இடங்களில் வீதிகளின் பெயர்ப்பலகைகள் அரபு மொழியில் இடம்பெற்றிருப்பது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.