ஐஸ்வர்யா ராயை தவறாக சித்தரித்து மீம்ஸ்.! மன்னிப்பு கேட்ட பிரபல பாலிவுட் நடிகர்!!

தமிழ் சினிமாவில் விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் முன்னணி நடிகர் விவேக் ஓபராய் .இவர் சமீபத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை விமர்சிக்கும் வகையில், ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை அநாகரிகமாக சித்தரித்து மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

ஐஸ்வர்யாராய் முதலில் நடிகர் சல்மான் கானை காதலிப்பதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் பிரிந்த நிலையில் அவர் விவேக் ஓபராயை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார் \.இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் சல்மான்கானுடன் உள்ள புகைப்படத்தை கருத்துக்கணிப்பு எனவும், விவேக் ஓபராயுடன் உள்ள புகைப்படத்தை பிந்தைய கருத்துக்கணிப்பு எனவும் கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை முடிவுகள் என்றும் குறிப்பிட்ட மீம்ஸை விவேக் ஓபராய் வெளியிட்டிருந்தார் அந்த மீம்ஸ் வைரலான நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டு விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் யார் மனதையும் காயப்படுத்தாது என்று சில நேரங்களில் நமக்கு தோன்றும் விஷயங்கள் பலர் மனதையும் காயப்படுத்துகிறது.நான் 2000க்கும் மேலான ஆதரவற்ற பெண்களின் சுய முன்னேற்றத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக பாடுபடுகிறேன். நான் எந்த ஒரு பெண்ணையும் மரியாதை குறைவாக நடத்த எப்பொழுதுமே நினைத்ததில்லை. அப்படி எனது கருத்து ஒரு பெண்ணையாவது காயப்படுத்தியிருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அந்த பதிவை நீக்கிவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.