தனி விமானத்தில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட கோடீஸ்வரர்!

அமெரிக்காவை சேர்ந்த பெரிய கோடீஸ்வரர் ஒருவர் விமானத்தில் 15 வயது சிறுமியிடம் மோசமாக நடந்து கொண்ட நிலையில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நியூ ஜெர்சியை சேர்ந்த ஸ்டீபன் பிராட்லி (53) என்ற கோடீஸ்வரருக்கு திருமணமாகி மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2017-ல் 15 வயது சிறுமியுடன் சமூகவலைதளம் மூலம் ஸ்டீபன் நட்பாகியுள்ளார்.

பின்னர் சிறுமியை நேரில் சந்தித்து அவரை மயக்கியுள்ளார் ஸ்டீபன். இதையடுத்து சிறுமியுடன் தனிமையிலும் ஸ்டீபன் இருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனி விமானத்தில் சிறுமியுடன் பயணித்த ஸ்டீபன் அவரிடம் மோசமாக நடந்து கொண்டார்.

இந்த விடயங்கள் வெளியில் தெரிந்த நிலையில் பொலிசார் ஸ்டீபனை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஸ்டீபன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு செவ்வாய்க்கிழமை தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.