சாட்டை பட ஹீரோயின் வெளியிட்ட அதிரடி வீடியோ!!

சாட்டை படத்தில் கண்களை சிமிட்டிக் கொண்டு, பள்ளி இளம்பெண்ணாக ‘அறிவழகி’ என்ற பெயரில் அமைதியான பெண்ணாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இதன்மூலம் பலரது மனதில் இடம்பிடித்த அவர் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘குற்றம் 23 ‘ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், விக்ரம் பிரபுவுடன் அசுரகுரு, ஆர்யாவுடன் மகாமுனி, ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது, அசுரகுரு படத்தின் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இது நடிகை மஹிமா நம்பியாரால் வெளியிடப்பட்டது.

இந்த படம் அவருக்கு பிறர் மனதில் வெகுவாக பதியும் அளவிற்கான கதாபாத்திரமாக அமைந்துள்ளதாகவும், மிகவும் சாதாரண பக்கத்து வீட்டுப் பெண்ணாக பல கதைகளில் நடித்து வந்த இவருக்கு இந்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் அதிரடியான காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் புகைப்பிடித்தல், புல்லட் ஓட்டுதல் போன்ற காட்சிகளில் வெகு ஜோராக நடித்து அசத்தியுள்ளார் மஹிமா நம்பியார்.