காஞ்சனா ரீமேக்கில் இருந்து வெளியேறிய லாரன்ஸ்.!!

தமிழ் திரையுலகில் மகத்தான வெற்றி பெற்ற காஞ்சனா திரைப்படத்தை இந்தியில் வெளியிட முடிவு செய்து., அதற்கான நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பானது துவங்கப்பட்டது. இந்த திரைப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் கதாநாயகனாகவும்., கியாரா அத்வானி மற்றும் அமிதாப் ஆகியோர் நடிக்க துவங்கினர்.

இந்த திரைப்படத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்க முடிவு செய்து., திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு துவங்கி வந்த நிலையில்., காஞ்சனா திரைப்படத்தின் ரிமேக் “லட்சுமி பாம்” முதற்பார்வையானது வெளியானது. இந்த வெளியீடு குறித்த தகவலை இயக்குனர் லாரன்ஸ் மற்றும் நடிகர் அக்ஷய் தரப்பில் தெரிவிக்கவில்லை என்ற தகவலானது வெளிவருகிறது.

இதனை கவனித்த நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில்., “தோழர்களே மதியாதோர் தலைவாசல் மிதியாதே” என்பது தமிழனின் பழமொழியாகும். லட்சுமி பாம் திரைப்படத்தின் படப்பிடிப்பில்., இந்த துயரமானது நிகழ்ந்தது. எனக்கு தன்மானம் பெரிது என்பதால்., லட்சுமி பாம் திரைப்படத்தில் இருந்து வெளியேறுகிறேன்.

நான் ஒரு கணம் நினைத்திருந்தால்., எனது கதையை தர முடியாது என்று அவர்களிடம் தெரிவித்து இருக்கலாம். நான் அப்படி செய்வதில்லை., செய்யபோவதும் இல்லை. நடிகர் மற்றும் சகோதரர் அக்ஷய் குமாரின் மீது எனக்கு அளப்பரிய மரியாதையானது உள்ளது. அவரை சந்தித்து படத்திற்கான அனைத்து தேவைகளையும் கூறி., அவரிடம் இயக்கத்தை ஒப்படைத்து விலகுகிறேன்.

பிற இயக்குனர்கள் மூலமாக இந்த படத்தை அவர்கள் தொடர்ந்து நடத்தலாம்., படத்தின் வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். இதுமட்டுமல்லாது அங்குள்ள தகவலின் படி., தயாரிப்பு நிறுவனமானது லாரன்ஸிற்கு தொடர்ந்து பல அவமரியாதை செய்து வந்த நிலையில்., கிண்டல் அடித்து வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தை அடுத்து தமிழனின் கோபம் அவன் கூடவே பிறந்தது., தலையே தனியாக எடுக்கும் சூழல் வந்தாலும்., தன் மானத்தை இழக்க விரும்பாத தமிழனாக மீண்டும் தமிழகத்திற்கு வந்ததாக திரைவட்டாரங்களில் இருந்து தகவல் கசிகிறது.