இந்த பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீங்க….

சாஸ்திங்களின் படி நாம் மற்றவர்களிடன் சில பொருட்களை கடன் வாங்கும் போது நமது வாழ்வில் பல பிரச்சினை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.

அந்தவகையில் எந்தெந்த பொருட்களை பிறரிடமிருந்து வாங்க கூடாது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • மற்றவர்களின் கடிகாரத்தை ஒருபோதும் இரவல் வாங்கி கட்டாதீர்கள். ஏனெனில் அடுத்தவர்களின் கடிகாரத்தை கடன் வாங்கி கட்டுவது உங்கள் வாழ்க்கையில் வறுமையையும், தோல்வியையும் ஏற்படுத்தும்.
  • மற்றவர்களின் கைக்குட்டையை பயன்படுத்துவது உங்களுக்கு வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை மட்டும் கூட்டிவராது, கெட்ட நேரத்தையும் சேர்த்துதான் கூட்டிவரும். மேலும் இது உங்கள் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
  • ஒருவரிடம் பேனா வாங்கிவிட்டு அதனை திரும்ப கொடுக்கா விட்டால் அது உங்களின் வாழ்க்கையில் வறுமையையும், அவமானத்தையும் ஏற்படுத்தும்.
  • நண்பர்களுக்குள்ளும், உறவினர்களுக்குள்ளும் உடைகளை பகிர்ந்து கொள்வது பொருளாதார பிரச்சினைகளை உண்டாக்கும். உங்கள் குடும்பத்திற்குள் கூட உடையை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
  • குளிக்கும் சோப்பில் அதிகளவு பாக்டீரியாக்கள் இருக்கும்.இதனை ஒருபோதும் ஒருவருக்கு மேற்பட்டோர் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி இதனை காயவைத்து விடுவது நல்லது.
  • ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு நோய் எளிதில் பரவ முக்கியமான காரணம் துண்டுகள் தான். துண்டுகளை அடிக்கடி துவைத்து விடுவது நல்லது, இதனை சூரிய ஒளியில் மட்டுமே காயவைக்க வேண்டும்.
  • நகவெட்டியை ஒருவர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை ஒருபோதும் வேறு ஒருவருக்கு கொடுக்கக்கூடாது.
  • காதணிகளை பகிர்ந்து கொள்வது பாதிப்பில்லாததாக தோன்றலாம். ஆனால் காதணிகளை பகிர்ந்து கொள்வது இரதம் தொடர்பான நோய்களை ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரப்பக்கூடும்.
  • ஹெட்போன்களை பகிர்ந்து கொள்வது காதுகளில் அதிக பாக்டீரியாக்களை பரப்பும். இதனை பகிர்ந்து கொள்ளும்போது அது மற்றவருக்கு அதிக பாதிப்புகளை உண்டாக்கும்.