வெளியிடப்பட்ட சான்றிதழ் …. கலைந்து போன மேகனின் நீண்ட நாள் கனவு!

இளவரசி மேகனுக்கு குழந்தை பிறந்த இடம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகியிருந்த நிலையில், குட்டி இளவரசரின் பிறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசி மேகன் தன்னுடடைய முதல் குழந்தையை கடந்த சில தினங்களுக்கு முன்பு பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் என பெயரிடப்பட்டது.

குழந்தையை ஃபிரோமோர் இல்லத்தில் தான் பெற்றெடுக்க வேண்டும் என ஆசைப்பட்டிருந்த மேகனுக்கு, எங்கு குழந்தை பிறந்தது என்கிற சந்தேகம், அரண்மனை ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அதற்கேற்றாற் போல குட்டி இளவரசர் ஆர்ச்சி ஹாரிசன், பிறப்பு சான்றிதழும் நீண்ட நாட்கள் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் குட்டி இளவரசர் ஆர்ச்சி, வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள தனியார் போர்ட்லேண்ட் மருத்துவமனையில் பிறந்தார் என சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இளவரசர் வில்லியம் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழில் ‘இளவரசி கேத்ரின்’ என குறிப்பிடப்பட்டிருந்ததை போலவே, ஆர்ச்சியின் பிறப்பு சான்றிதழில், ‘இளவரசி ரேச்சல் மேகன்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.