மே 23 இந்தியாவில் பிரளயம் வெடிக்கும் : உளவுத்துறை எச்சரிக்கை..?

மே 23 ஆம் தேதி பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு அமைக்கும் வாய்ப்பு தங்களுக்கு கிடைக்காமல் போனால், எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டத்தில் குதிக்கும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இதில்,வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம் எழுப்பி பாஜக மீது புகார் கிளப்ப உள்ளதாகவும் மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள உளவுத்துறை, அரசை எச்சரித்து உஷார்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி அமர்வது எதிர்க்கட்சிகளுக்கு பெரிய அவமானம் ஆகும். ஏனெனில், கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பிருந்தும் தங்களுக்குள் ஒற்றுமையின்மையால் அது ஏற்படவில்லை.

பொதுமக்களிடம் இதற்கு பதில்சொல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதை திசைதிருப்பி சமாளிக்க, வாக்கு பதிவு இயந்திரங்கள் உதவியால் பாஜக வெற்றி பெற்றதாகக் கூறி நாடு முழுவதிலும் பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிடப்படுகிறது.

இந்த தகவல் உத்திரபிரதேச மாநிலத்தில் முதன்முதலாக கசிந்துள்ளது. இதனை தொடர்ந்தே உளவுத்துறை இந்தியா முழுவதுக்கும் இந்த எச்சரிக்கையை அனுப்பியுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ல் அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் மதியம் டெல்லியில் கூடும் பெரும்பாலான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப ஆலோசனை செய்ய உள்ளனர்.