மெரினாவில் திடீர் பதற்றம்.. பற்றி எரியும் வீடுகள்

சென்னை மெரினா கடற்கரை அருகே இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது.

சென்னை பட்டினப்பாக்கம் அருகே உள்ள டுமீல் குப்பத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில், தொடர்ச்சியாக பரவிய தீயினால் சில வீடுகளில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறின.

இதனால் குபுகுபுவென்று தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்த தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் பரவியது.

இதில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.

உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.