சிறுமியை கொடூரமாக கொலை செய்த வளர்ப்பு தாயார்!

அமெரிக்காவில் 9 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி வளர்ப்பு தாயார் குற்றவாளி என கியூன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 55 வயதான ஷம்தாய் அர்ஜுன் என்பவரே தமது 9 வயதேயான வளர்ப்பு மகளை மிகவும் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

கொல்லப்படுவதற்கு 3 மாதங்கள் முன்னரே அஷ்தீப் கவுர் தமது உறவினர்களுடன் பஞ்சாபில் இருந்து அமெரிக்காவின் கியூன்ஸ் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஷம்தாய் தொடர்ந்து சிறுமி அஷ்தீப் கவுரை துன்புறுத்தி வந்துள்ளார். மட்டுமின்றி கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

சம்பவம் நடந்த 2016 ஆகஸ்டு மாதம் ஷம்தாயின் பேரப்பிள்ளைகள் இருவருடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளனர்.

அப்போது அண்டை வீட்டார் சிறுமி அஷ்தீப் தொடர்பில் விசாரித்துள்ளனர். அதற்கு பதிலளித்த ஷம்தாய் அவர் குளித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதில் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மேற்கொண்ட விசாரணையில்,

குடியிருப்பினுள் சிறுமி அஷ்தீப் நிர்வாணமாக கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சிறுமியை ஷம்தாய் துன்புறுத்தி வந்தது அம்பலமானது.

இந்த வழக்கு தொடர்பில் விசாரணை மேற்கொண்டுவந்த கியூன்ஸ் நீதிமன்றம் எதிர்வரும் ஜூன் 3 ஆம் திகதி தீர்ப்பை வெளியிட உள்ளது.

அவர் மீதான குற்றம் நிரூபணமான நிலையில் 25 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.