கொட்டும் மழையில் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்கள்: எதற்காக?

கொட்டும் மழையில் மணிக்கணக்காக மக்கள் காத்திருக்கும் புகைப்படம் ஒன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார்.

Wellingboroughவிலுள்ள ஒரு மருத்துவமனை ஒன்றின் முன் சுமார் 20 நோயாளிகள், கொட்டும் மழையில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்றை அந்த மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் Joanne Buckland என்பவர் வெளியிட்டுள்ளார்.

Queensway Medical Centre என்னும் அந்த மருத்துவமனையின் மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்காகத்தான் மக்கள் அப்படி நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.

அவர்கள் சுமார் 75 நிமிடங்கள் வரை நின்று கொண்டிருந்ததை தான் பார்த்ததாக Joanne தெரிவிக்கிறார்.

காலை ஆறு மணிக்கு வரும் நோயாளிகள் தங்கள் உடன் நிலைக்கிடையிலும், மோசமான சீதோஷ்ண நிலையிலும் காலை 6.45 முதல் 8 மணி வரையிலும் நிற்பதாக தெரிவிக்கிறார் அவர்.

அந்த மருத்துவமனையை பொருத்தவரையில், தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதும் கடினம் என்று கூறுகிறார் Joanne.

இது குறித்து கேட்டபோது மருத்துவமனை கருத்து கூற மறுத்துவிட்டது.