இங்கேயும் பெண்களுக்கு அனுமதி இல்லையா? பொங்கியெழுந்த நடிகை கஸ்தூரி!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் கஸ்தூரி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்,

மேலும் நடிகை கஸ்தூரி எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருப்பவர். அவர் அரசியல், பெண்ணியம் மற்றும் சமீபகால நிகழ்வுகள் குறித்தும் சமூகத்தில் நிகழும் அநீதிகள் குறித்தும் எப்பொழுதும் தன் மனதில் பட்ட கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வார்.

மேலும் இதுபோன்ற பதிவுகளை அவர் பதிவிடுவதால் பல்வேறுவிதமான சிக்கல்களுக்கு மற்றும் கேள்விகளுக்கு ஆளாவார். மேலும், பல நெட்டிசன்கள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பதும் உண்டு. அதனை தொடர்ந்து சில சமயங்களில் சில கருத்துக்களுக்கு நடிகை கஸ்தூரி நேரடியாக பதில் அளிப்பதும் உண்டு.

இந்நிலையில், தற்போது நடிகை கஸ்தூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷூட்டிங்குகளில் பயன்படுத்தும் யூனிட் வண்டி, ஜெனரேட்டர் வண்டி புகைப்படத்தை வெளியிட்டு,அதில் “சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது. காரணம் தீட்டாம் என பதிவிட்டுள்ளார் .