விவாகரத்தானவர் என்று கூறி ஏமாற்றிய கணவர்: அதிரடி முடிவெடுத்த மனைவி!

தான் விவாக ரத்தானவன் என்று கூறி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு தனது பணம் முழுவதையும் கணவர் அபகரித்துக் கொள்ள, கன்னியாஸ்திரியாகிவிட்ட ஒரு பெண் அதிரடி முடிவொன்றை எடுத்துள்ளார்.

ஜார்ஜியாவைச் சேர்ந்த Christine Meeusen (59), வாழ்க்கையில் ஏற்பட்ட தொடர் ஏமாற்றங்களால் கன்னியாஸ்திரீயானதோடு கஞ்சா பண்ணை ஒன்றை உருவாக்கி வெற்றிகரமாக தொழில் முனைவராகிவிட்டார்.

தனது கணவன் விவாகரத்தானவர் அல்ல என்பது தெரியவந்ததோடு, தனது 1 மில்லியன் டொலர்கள் சேமிப்பையும் அவர் எடுத்துக் கொண்டதையறிந்து கொண்டார் Christine.

வணிகப் பகுப்பாய்வாளரான Christine, கலிபோர்னியாவுக்கு சென்று ஒரு கன்னியாஸ்திரியாக முடிவு செய்தார்.

Christine என்ற பெயரை மாற்றி சிஸ்டர் கேட் என தன்னை அழைத்துக் கொள்ளும் அவர், கலிபோர்னியாவில் கஞ்சா தொழில் செழித்திருப்பதைக் கண்டார்.

தற்போது கஞ்சா பண்ணை ஒன்றை உருவாக்கியுள்ள சிஸ்டர் கேட், 3.8 மில்லியன் பவுண்டுகளுக்கு சொந்தக்காரியாகியுள்ளார்.