மாணவிகளை தவறாக தொட்ட ஆசிரியர்: கோபத்தில் பெற்றோர்!

வயலின் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ஒருவர் தனது மாணவிகளின் மார்பகங்களை தவறாக தொட்டும், நீதிமன்றம் அவரை விடுவித்துள்ள சம்பவம் மாணவிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

டொராண்டோவில் Claude Trachy என்னும் வயலின் ஆசிரியர் ஒருவர் மீது அவரது முன்னாள் மாணவிகள் 21 பேர் அவர் தங்களை தவறாக தொட்டதாக புகாரளித்திருந்தனர்.

ஆனால் Trachy தரப்பில், தான் தன் மாணவிகள் சரியாக வயலின் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு செய்ததாக விவாதிக்கப்பட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால் வழக்கை விசாரித்த நீதிபதியும் Trachy தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டதுதான்.

இதனால் அவர் மீது புகாரளித்திருந்த முன்னாள் மாணவிகள் கோபமடைந்துள்ளனர்.

ஏற்கனவே Trachy மீது பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், தற்போது மாணவிகளின் மார்பகங்களை தொட்ட வழக்கில் நீதிபதி அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டுள்ளது, அவரது முந்தைய வழக்குகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட வழிவகை செய்து விடலாம் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

Trachy தான் மாணவிகளின் மார்பகங்களை தொட்டதை ஒப்புக்கொண்டாலும், பாலியல் நோக்கத்திற்காக அவ்வாறு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

வழக்கை விசாரிக்கும் நீதிபதியான Thomas Carey, தான் Trachy மாணவிகளை தொட்டது பாலியல் நோக்கத்திற்காக அல்ல, அவர்களை நல்ல வயலின் கலைஞர்கள் ஆக்குவதற்காகத்தான் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நீதிபதி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்து, நீங்கள் ஏன் உங்கள் முழங்கால்களை இறுக்கி மூடி வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டதை நினைவு கூர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் இந்த வழக்கும் அதே வழக்கு போல்தான் என்கிறார்.