பொலிஸ் ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்!

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று இரவும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று மாலை 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.