புகையிரதத்தில் வைத்து சிக்கிய வெளிநாட்டு பெண்

சந்தேகத்திற்கிடமான இலத்திரனியல் பொருட்களுடன் ஜேர்மனி குடியுரிமை பெற்ற பெண்ணொருவர் இன்று காலை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் வைத்து சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது உடமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இராணுவத்தினரால் இலத்திரனியல் பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து சந்தேகநபரான அந்த பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.