சுற்றுலா தளங்களில் இருக்கும் தனியார் விடுதி குளியலறையில் நடைபெறும் கொடூர சம்பவங்கள்.!

புதுச்சேரி மாநிலம் பொதுவாக சுற்றுலா மாநிலமாக திகழ்ந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். புதுச்சேரியில் உள்ள புஸ்லி பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கும் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதியை சார்ந்த பெண் மருத்துவர் ஒருவர் தனது நண்பருடன் தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில்., இவர்கள் இருவரும் நேற்று புதுச்சேரியில் உள்ள சில சுற்றுலா தலங்களுக்கு சென்று விட்டு., பின்னர் விடுதியறைக்கு திரும்பியுள்ளனர். விடுதிக்கு நள்ளிரவு நேரத்தில் திரும்பிய பெண் மருத்துவர்., குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றுள்ளார். அவர் குளித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில்., அவரை யாரோ ஒருவர் பார்ப்பது போல உணர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த உணர்வை அடுத்து அவர் குளியலறையின் காற்றோட்ட பகுதியை (வெண்டிலேட்டர்) பார்த்த சமயத்தில்., வாலிபர் ஒருவர் அலைபேசியில் குளியல் காட்சிகளை பதிவு செய்வதை கண்டுள்ளார். இதனையடுத்து அவர் கூச்சலிடவே., வெளியே இருந்த வாலிபர் அங்கிருந்து தப்பியுள்ளார். இவரின் கூச்சல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த நண்பர் அவரிடம் விஷயத்தை கேட்டறிந்துள்ளார்.

இதனையடுத்து இது குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., விடுதியில் ஊழியராக பணியாற்றி பிரசாந்த் என்ற 24 வயதுடைய இளைஞரை காவல் துறையினர் சந்தேகித்து மேற்கொண்ட விசாரணையில்., அவரது அலைபேசியில் பெண் குளிப்பதை பதிவு செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர்., இவனுக்கு பின்னனியில் ஏதேனும் கும்பல் உள்ளதா? வீடியோ பதிவை வைத்து பெண்களை மிரட்டினானா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.