இலங்கை தாக்குதல்தாரியை வேனில் அழைத்து வந்த நபர் பொலிசில் சிக்கினார்…

இலங்கையின் Kochchikadeவில் நடத்தப்பட்ட தாக்குதலில் சம்பவ இடத்துக்கு வந்த தாக்குதல்தாரிக்கு வாகன உதவி செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான செய்தியை பத்திரிக்கையாளர் கவிந்தன் தனது டுவிட்டர் @Kavinthans பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த 21ஆம் திகதி Kochchikade-ல் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட தற்கொலைப்படை தாக்குதல்தாரி வேனில் சம்பவ இடத்துக்கு வந்தார்.

இந்த வேன் சீட்களை தயார் செய்து அதை எடுத்து கொண்டு வந்த நபரை பொலிசார் தற்போது New Kanthakudy பகுதியில் கைது செய்துள்ளதாக கவிந்தன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.