இரவு நேரங்களில் தவிக்கும் இஸ்லாமிய மக்கள்…

இலங்கையில் வாழும் இஸ்லாமிய மக்கள் தங்களது தொழில் நிறுவனங்களை திறக்க அச்சப்படுவதோடு, ரம்ஜான் நோன்பு மாதத்துக்கான இரவு தொழுகைகளை பள்ளிவாசல்களில் நடத்த முடியாமல் தவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றது.

இந்நிலையில் இஸ்லாமியர்கள் அதிகளவில் வாழும் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் மசூதிகள் இரு நாட்களுக்கு முன்னர் சூறையாடப்பட்டது.

இஸ்லாமியர்களின் பல வர்த்தக நிறுவனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டது.

இதையடுத்து இஸ்லாமியர்கள் தங்களது தொழில் நிறுவனங்களை திறக்க அச்சப்படுகின்றனர்.

மேலும் புனித ரம்ஜான் நோன்பு மாதத்துக்கான இரவு தொழுகைகளை பள்ளிவாசல்களில் நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என இலங்கையில் உள்ள இஸ்லாமிய கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்த செய்தி swarajya பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது

அதன்படி பொதுவெளியில் வரும் இஸ்லாமியர்கள் கருப்பு நிறத்திலான உடைகளை தவிர்த்து வேறு நிறங்களில் உடைகளை அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொது இடங்களில் வைக்கும் பதாகைகளில் அரபு மொழிகள் இருந்தால் நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாகனங்களில் அரபு மொழியில் எழுதப்பட்ட எழுத்துக்கள் மற்றும் வாள் புகைப்படங்கள் இருந்தால் நீக்க கோரப்பட்டுள்ளது.

அதே போல மசூதிகளில் தொழுகைக்கு முன்னர் அழைப்பு விடுக்கும் இசையின் ஒலியை சரியான அளவில் வைக்கலாம், இது வேறு மதத்தினர் வாழும் இடங்களில் பின்பற்றலாம் என கூறப்பட்டுள்ளது.