மணமேடையில் மணப்பெண்ணை கட்டிபிடித்த நபர்.. ஆத்திரமடைந்த மாப்பிள்ளை செய்த செயலின் வீடியோ

மணமேடையில் மணப்பெண்ணை மாப்பிள்ளை தோழன் இறுக்கமாக கட்டி பிடித்த நிலையில் அவரை மாப்பிள்ளை சரமாரியாக அடித்துள்ள்ளார்.

இந்த சம்பவம் நைஜீரியாவில் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

அதில் திருமண கோலத்தில் மாப்பிள்ளையும், மணப்பெண்ணும் அருகருகில் நிற்கிறார்கள்.

அப்போது திடீரென மாப்பிள்ளை தோழன் மணப்பெண்ணை இறுக்க கட்டி பிடித்தார், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத மணப்பெண் சிரித்தப்படி இருந்தார்.

இதை பார்த்து ஆத்திரமடைந்த மணமகன் அவரை சரமாரியாக அடிப்பது போல வீடியோவில் உள்ளது. இந்த வீடியோ குறித்து இணையதள பயன்பாட்டாளர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

ஒருவர் கூறுகையில், இந்த அடி போதாது, நானாக இருந்தால் மேலும் அடித்திருப்பேன். மாப்பிள்ளை தோழன் கட்டிபிடித்த போது மணப்பெண்ணும் சிரித்து கொண்டே இருந்தது ஆச்சரியமளிக்கிறது என தெரிவித்தார்.

ஜெனிபர் என்பவர் கூறுகையில், மாப்பிள்ளை தோழனுக்கு வேறு திட்டம் இருந்தது போலும், அவர் ஏன் வேறு நபரின் மனைவியை அப்படி கட்டிப்பிடிக்க வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

இவ்வாறு பலரும் பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by TheFamousNaija (@thefamousnaija) on