மணமகன் குறிவைத்து செய்த கொடூர செயல்!!

17 வயது சிறுமிக்கு ஏற்பாடு செய்த திருமணம் குறித்து போலீசாருக்கு ஆட்டோ டிரைவர் தெரிவித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதன்காரணமாக தனது மக்களின் திருமண வரவேற்பின் போதே மனைவியின் முன்னிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜெபசீலன் என்பவர் ஆட்டோ ஓட்டுநராக இருக்கின்றார். கடந்த 10-ம் தேதி இவரது மக்களுக்கு திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மீஞ்சூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

உறவினர்களை முதலில் அனுப்பிய ஜெபசீலன் அதன்பின்னர் தனது மனைவியுடன் வரவேற்பு நடக்கும் இடத்திற்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது அவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென சுற்றி வளைந்துள்ளது.

அதன்பின்னர் பயங்கரமான ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு நடந்த விசாரணையில், திருமணம் நிறுத்தப்பட்ட மணமகனாக வினோத் முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளார் என தெரிகிறது.