பொது மக்களுக்கு இராணுவத்தினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டில் தற்போது ஏற்பட்டு அவசர நிலைமை தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு பாதுகாப்பு சபை பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுனவர்த்தன இலங்கை மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சினால் வழங்கும் தகவல்களை மட்டும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் மற்றும் போலி குறுந்தகவல்கள் குறித்து அச்சப்பட வேண்டாம் என அவர் கேட்டுள்ளார்.

பல பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. படையினரின் செயற்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம் அவர் கேட்டுள்ளார்.

இதேவேளை, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இராணுவத்தினருக்கு நேரிடும் என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க நேற்று எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.