சுவிட்சர்லாந்தில் பெண் உயிருடன் எரித்துக் கொலை!

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகரில் சொந்த மகனே தாயாரை எரித்துக் கொலை செய்துவிட்டு மாயமான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

லூசெர்ன் நகரின் Brunnen பகுதியில் குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பொலிசாருக்கு தகவல் ஒன்று வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், குடியிருப்பு ஒன்றில் மொத்தமாக எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

மரணமடைந்தவர் 56 வயது பெண்மணி எனவும், அவர் அப்பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்துள்ளதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பொலிசார் அந்த குடியிருப்புக்கு விரைந்த நிலையில், அந்த வங்கி மேலாளரின் 18 வயது மகன் மாயமானதாக கூறப்படுகிறது.

மேலும் காட்டுக்குள் பதுங்கி இருந்த அந்த இளைஞரை பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர்.

தமது தாயால் கொல்லப்பட்டதற்கும் தமக்கும் தொடர்பு ஏதும் இல்லை என தெரிவித்துள்ள அந்த இளைஞரை தற்போதுவரை பொலிசார் விசாரணை கைதியாக சிறை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு மிக விரைவில் எடுத்துக் கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.