கமலை எதிர்த்து களமிறங்கிய முஸ்லீம் கட்சி!!

அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கமல் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்துபோது மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல். இந்த பிரச்சாரத்தில் பேசிய அவர், “முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியனின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார் தட்டி சொல்வேன். மனிதர்கள் மீது நான் நேசத்தை காட்டுகிறேன். இதனால் எங்கள் மக்கள் நீதி மையத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது” என சர்ச்சை கூறிய வகையில் கமல் பேசினார்

இந்தநிலையில், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு இடையே மதகலவரத்தை தூண்டும் வகையில் கமல்ஹாசன் பேசி உள்ளதாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது

அந்த புகாரில், இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அவரது கட்சி வேட்பாளர்களை இந்த தேர்தலில் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த கட்சியை தடை செய்து இது போன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாத வகையில் தேர்தல் ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.