மும்பை அணியின் வெற்றிக்கு நீதா அம்பானியின் மந்திர சக்தி காரணமா?

ஐபிஎல் போட்டியில் லசித் மலிங்காவின் அனுபவமிக்க பந்துவீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

Mumbai celebrate with the trophy in the dressing room during the final of the Pepsi IPL 2015 (Indian Premier League) between The Mumbai Indians and The Chennai Superkings held at Eden Gardens Stadium in Kolkata, India on the 24th May 2015.
Photo by: Ron Gaunt / SPORTZPICS / IPL

மும்பை அணியின் வெற்றி குறித்து அந்த அணியின் உரிமையாளர் நீதா அம்பானி கூறியதாவது, கடைசி ஓவரை என்னால் பார்க்க இயலவில்லை. அந்த அளவுக்கு த்ரில்லாக இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக நின்றுகொண்டு நானும் உற்சாகம் செய்தேன்.

மும்பை அணி 2013, 2015, 2017 மற்றும் 2019 ம் ஆண்டு என 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த அனைத்து போட்டிகளிலும் ரோகித் சர்மா அணியின் கேப்டனாக வழிநடத்தியுள்ளார்.

எங்கள் அணியை இவ்வளவு அழகாக வழிநடத்தியதற்கு வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் போது தனது அணி விளையாடிபோது நீதா அம்பானி மைதானத்தில் அமர்ந்து சாமி கும்பிட்ட புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

மும்பை அணியின் வெற்றிக்கு நீதா அம்பானி சாமி கும்பிட்டது காரணம் என்றும் அவரிடம் ஏதோ மந்திர சக்தி இருக்கிறது என புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும், ஆட்ட நாயகன் விருது நீதா அம்பானிக்கு தான் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.