காலை கண் விழித்ததும் யாரை பார்த்தால் அதிர்ஷ்டம்..?

நம்மில் பலர் “இன்றைய பொழுது விடிந்ததும் யார் முகத்தில் விழித்தோமோ, அதனால் எந்த ஒரு காரியமும் சரியாக நடப்பதில்லை” என்று பிறர் சொல்வதை கேட்டிருப்போம்.

ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்து கண் திறந்து முதன் முதலில் காணும் பொருட்கள் மங்களகரமாக இருப்பின், அன்றைய நாள் முழுவதும் நல்லதே நடக்கும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. தூக்கத்திலிருந்து விழித்ததும் முதன் முதலில் காணக்கூடிய விடயங்கள் சிலவற்றை அவர்கள் கூறியுள்ளனர்.

அவை என்ன என்பதை இங்கு காணலாம்.

காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்ததும் முதன் முதலில் கண் விழித்து உங்களது வலது உள்ளங்கையை காண வேண்டும். அல்லது செல்வ மகளான மகாலட்சுமியின் படத்தை பார்ப்பதால் அன்றைய தினம் மங்கலங்கள் பல உண்டாகும் என கூறுகிறார்கள்.

தூக்கத்திலிருந்து கண் விழிக்கும் போது முகம் பார்க்கும் கண்ணாடியில், தன் முகத்தையே பார்ப்பதால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். உங்களின் அன்பிற்குரியவர்களான தாய், மனைவி அல்லது உங்கள் குழந்தைகள் ஆகியோரின் முகத்தில் விழிப்பதும் நல்லது.

காலையில் எழுந்ததும் கண் விழித்து முதன் முதலில் சூரியனை தரிசிப்பது சிறந்தது. தாமரைப் பூ, சந்தனம், கடல் மற்றும் அழகான இயற்கைக் காட்சிகளை காலை கண் விழித்ததும் பார்ப்பது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தந்து அன்றைய தினத்தை சிறப்பானதாகும்.

மேலும் பயிர்கள் விளையும் வயல், சிவலிங்கம், கோயிலின் ராஜகோபுரம், உங்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசுமாடு, நறுமணம் வீசும் மலர்கள் நிறைந்த பூந்தோட்டம் ஆகியவற்றை காலையில் எழுந்ததும் கண் விழித்து பார்ப்பது மனதிற்கு உற்சாகத்தை தந்து அன்றைய தினத்தை இனிமையான நாளாக ஆக்குகிறது.

தினமும் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் தூக்கத்திலிருந்து எழுந்து, நடைப்பயிற்சி செய்து, சூரிய தரிசனம் செய்தால் அனைத்து தினங்களும் சிறப்பானதாக இருக்கும் என்பது அனுபவம் வாய்ந்த பெரியோர்களின் கருத்தாக உள்ளது.