உயிரைக் கொல்லும் புற்றுநோயை கட்டுபடுத்த..???

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது. இந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது.. சீரகம் என்றால் சீர் + அகம்… இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சனைகளை தீர்க்கிறது.

சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான்.. ஆனால் அதை விட சிறந்தது தான் சீரக தண்ணீரை பருகுவது ஆகும். தண்ணீரில் சிறிது சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுக்கு மிகவும் நல்லது. அஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

சீரகத்தின் அற்புத மருத்துவ குணங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

சீரகத்தின் மருத்துவ குணங்கள் :

உள் உறுப்புகளை சீர் செய்வதாலேயே இதற்கு சீரகம் என்ற பெயர் வந்தது. குறிப்பாக செரிமாணத்தை தூண்டக் கூடியது.

கல்லீரலை பலப்படுத்தக் கூடியது. ரத்தத்தில் பித்தத்தின் அளவை கட்டுப்படுத்தக் கூடியது. புற்றுநோயை கட்டுப்படுத்தும்.

சீரகத்தில் உள்ள இரும்பு சத்தானது உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை சரியாக நடைமுறைப்படுத்தி எடுத்து செல்லும். கருஞ்சீரக எண்ணெய் முடக்குவாதத்திற்கு நல்ல மருந்து.

சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின்(குருதிச் சிவப்புநிறமி) அளவை அதிகரிக்கும்.இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

சீரகம் உடலுக்கு உஷ்ணத்தை தந்து வியர்வையை வெளியேற்றக் கூடியது.பூஞ்சை மற்றும் நுண்ணுயிர் தொற்றுகளில் இருந்து காக்கும்.

சுவாச கோளாறுகளுக்கு நல்ல தீர்வை தரும். எடை குறைப்பதில் உதவும்.

சீரகத்தில் தைமோக்யூநோன் இருப்பதால் ஆஸ்துமா (ஈளை நோயை) கட்டுப்படுத்தும். நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.

குறிப்பு:

சீரகத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அவற்றுள் சில சீரக எண்ணெயில் எளிதில் ஆவியாக கூடிய பொருட்கள் இருப்பதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்த கூடும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைப்பதால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மிதமான அளவே பயன்படுத்த வேண்டும்.