இப்படியுமொரு காதலியா?

மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வருபவர் ஷோபித் சிங். இவர் சலூன் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் மாயமானர்.இந்நிலையில் ஷோபித்தை அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நண்பர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில், ஷோபித் தங்கியிருந்த வீட்டில் இருந்து அவரது நண்பர் கடிதம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த கடிதத்தில், எனது காதலி, வேறு ஆண்களுடன் தகாத உறவில் உள்ளார். இதுகுறித்து நான் அவளிடம் கேட்டபோது, அவளும் அவளது இரு ஆண்களும் என்னை தாக்கினர்.

அதுமட்டுமின்றி நான் என் காதலிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை போலவும் பேச வைத்து வீடியோ எடுத்து வைத்துகொண்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துவிடுவோம் என என்னை மிரட்டினர். அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதியுள்ளார்.என் தற்கொலைக்கு என் காதலியும், அவரது இரு ஆண்நண்பர்களுமே காரணம் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையத்தில் இந்த கடிதத்தை ஷோபித் நண்பர்கள் மற்றும் அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த வந்த நிலையில், அழுகிய நிலையில் ஷோபித் சிங் உடலை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள அம்போலி எனும் இடத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.