ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது ஈராக் அரசு..!

பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஈராக் நாடாளுமன்ற தடை செய்துள்ளது.

ஈராக் நாடாளுமன்றத்தில், இளைஞர்கள் பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு பெருமளவில் அடிமையாகி உள்ளதால் அவற்றை தடைவிதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

அதனை ஏற்று கொண்ட ஈராக் அரசு, சில ஆன்லைன் விளையாட்டுக்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதாகவும், தேசப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் அவற்றுக்கு ஈராக் நாடாளுமன்றம் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த தடையில், உலகம் பிரபலமான பப்ஜி மற்றும் ஃபோர்ட்நைட் போன்ற விளையாட்டுகளும் உள்ளடங்கும்.