லொறியின் சக்கரத்தில் நசுங்கிய பிஞ்சு குழந்தை: வீடியோ!

தாய்லாந்தில் செல்போன் பேசிக்கொண்டிருந்த தாயின் கண்முன்னே அவருடைய குழந்தை லொறியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளது.

தாய்லாந்தை சேர்ந்த வில்வன் பிபன் (32) என்கிற தாய், செல்போனில் தன்னுடைய தங்கையுடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.

அப்போது வீட்டின் வாசலில் நடைபயிலும் வண்டியில் விளையாடிக்கொண்டிருந்த அவருடைய 8 மாத குழந்தை வாசல் கதவை திறக்க முயன்றுள்ளது.

எதிர்பாராத விதமாக வாசல் கதவு திறந்ததும், சாலையில் சென்ற லொறியின் சக்கரத்தில் சிக்கி அந்த குழந்தை சம்பவ இடத்திலே நசுங்கி இறந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வில்வன், தன்னுடைய கவனக்குறைவால் தான் குழந்தை இறந்துவிட்டது எனக்கூறி கதறி அழுதுள்ளார்.