நாளை தாக்குதல் இடம்பெறுமா?

(எம்.எப்.எம்.பஸீர்)

நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை, கொழும்பின் வெள்ளவத்தை, பஞ்சிகாவத்தை உள்ளிட்ட பல இடங்களில் குண்டு வெடிப்புகள் இடம்பெறலாம் என சமூக வலைத்தலங்களில் பரவிவரும்  தகவல்கள் உளவுத் துறையால் உறுதிப்படுத்தப்படாதவை என பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர கூறினார்.

எனினும் தமக்கு கிடைக்கும் எந்த ஒரு தகவலையும் இலேசாக தாம் கருதவில்லை எனவும் அதனால் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் வீண் அச்சம் கொள்ளாது அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.