சொகுசு வாழ்க்கையை உதறிதள்ளி ஆடு மாடு மேய்க்கும் வெளிநாட்டு பெண்!

காதலுக்கு கண்கள் இல்லை,காதலுக்கு எல்லையும் இல்லை என நிரூபித்துள்ளார் வெளிநாட்டு பெண்மணி ஆண்ரியன் பெரல்.

கலிபோர்னியாவில் கைநிறைய சம்பளம், சொகுசு வாழ்க்கை என இருந்த 41 வயதான ஆண்ரியன், 2013 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் தன்னை விட வயதில் இளையவரான 25 வயது முகேஷ் குமார் என்பவடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது. வேலை முடித்ததும் கிளப்புக்கு செல்வது, விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலி வாழ்க்கை என இருந்த ஆண்ரியன், ஹரியானா மாநிலத்தில் மாடுகளை மேய்த்து வருகிறார்.

எல்லாம் காதல் செய்த வேலை. எல்லை தாண்டி இதயத்தை கிழத்த இந்த காதல், தற்போது சந்தோஷமாக பயணித்துக்கொண்டிருக்கிறது.

என்னதான் வயதில் சிறியவராக இருந்தாலும், முகேஷின் பெற்றோர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

திருமணத்திற்கு பிறகு, ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

முகேஷ் குடும்பம் விவசாயம் மற்றும் ஆடு மாடுகளை மேய்க்கும் குடும்பம். என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இங்குள்ள கலாசாரத்திற்குள் நான் மூழ்கிவிட்டேன். இந்திய மருமகளாக வாழ்வதில் எனக்கு பெருமையாக இருக்கிறது என கூறியுள்ளார்.